Featured

வெண்ணிலா ஐஸ் கிரீம்




தேவையான பொருட்கள் 

க்ரீம் ஒரு கப் 

பால் ஒரு கப் 

சர்க்கரை 1/2 கப் 

வெண்ணிலா எசன்ஸ்1/2 டீஸ்பூன் 

ஐஸ் கட்டிகள் 4

 உப்பு 1 கப் 

ஜிப் லாக் கவர் 1

செல்லோடேப் 1

டப்பா 1

செய்முறை 

பால் க்ரீம் வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை அனைத்தையும் ஜிப் லாக் கவரில் ஊற்றவும் 

பிறகு செல்லோடேப் கொண்டு ஒட்டவும் 

இது இறுக்கமாக  இருக்கவேண்டும் 

இல்லையென்றால் இதை உலுக்கும் போது பால் வெளிய வந்துவிடும்

இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு

அதன் மேல் ஐஸ் கட்டிகள் உப்பு போட்டு நன்றாக மூடவும்

இப்போது நன்றாக 10 நிமிடம் குலுக்கவும்

இப்போது அந்த பையை எடுத்து

ஃப்ரீசரில்  வைக்கவும் 

அரைமணி நேரம் கழித்து பையை திறந்து பாருங்கள்

சுவையான வெண்ணிலா ஐஸ் தயார்






Comments

Popular Posts