Skip to main content

Featured

வெண்ணிலா ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்  க்ரீம் ஒரு கப்  பால் ஒரு கப்  சர்க்கரை 1/2 கப்  வெண்ணிலா எசன்ஸ்1/2 டீஸ்பூன்  ஐஸ் கட்டிகள் 4  உப்பு 1 கப்  ஜிப் லாக் கவர் 1 செல்லோடேப் 1 டப்பா 1 செய்முறை  பால் க்ரீம் வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை அனைத்தையும் ஜிப் லாக் கவரில் ஊற்றவும்  பிறகு செல்லோடேப் கொண்டு ஒட்டவும்  இது இறுக்கமாக  இருக்கவேண்டும்  இல்லையென்றால் இதை உலுக்கும் போது பால் வெளிய வந்துவிடும் இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு அதன் மேல் ஐஸ் கட்டிகள் உப்பு போட்டு நன்றாக மூடவும் இப்போது நன்றாக 10 நிமிடம் குலுக்கவும் இப்போது அந்த பையை எடுத்து ஃப்ரீசரில்  வைக்கவும்  அரைமணி நேரம் கழித்து பையை திறந்து பாருங்கள் சுவையான வெண்ணிலா ஐஸ் தயார்

மீன் குழம்பு

 


தேவையான பொருட்கள் 

மீன்  துண்டுகள் 

15 சிறிய வெங்காயம் 

2 பெரிய தக்காளி 

10 பல் பூண்டு 

தேவையான அளவு உப்பு 

சிறிதளவு புளி 

1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் 

2 ஸ்பூன் மல்லி தூள் 

தேவையான அளவு எண்ணெய்

1 ஸ்பூன் வெந்தயம் 

4 பச்சை மிளகாய் 

1 கப் தேங்காய் 

               செய்முறை 

முதலில் ஒரு கடாயில் புலியை கரைத்து  கொள்ளவும்  ஒரு வட சட்டியில்  எண்ணெய் ஊற்றி வெங்காயம்  தக்காளி பூண்டு  தேங்காய் வதக்கி  மிக்ஸியில்  அரைத்து  வைக்கவும் 

பின்பு ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் வெந்தயம்மிளகாய் தூள்  மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் 

பின்பு அரைத்த மசாலா  கரைத்த  புளியை சேர்த்து கொதிக்க விடவும் இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீன்  துண்டுகளை  சேர்த்து  வேக விடவும்

மீன்  வெந்ததும்  கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான மீன்  குழம்பு  தயார் 

Comments

Popular Posts