Featured
- Get link
- X
- Other Apps
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
3/4 கிலோ பாசுமதி அரிசி
1 கிலோ சிக்கன்
5 பெரிய வெங்காயம்
4 தக்காளி
5 பச்சை மிளகாய்
1 கப் தயிர்
2 கையளவு புதினா
2 கையளவு கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
ஆயில் தேவையான அளவு
3 பிரியாணி இலை
3 ஸ்டார் பூ
3 பட்டை
3 கிராம்பு
3 ஏலக்காய்
1 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
11/2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
1 மேஜை கரண்டி கரம் மசாலா
4 to 5 முந்திரி
1/2 லெமன்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
முந்திரியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடானதும் அதில் 3 மேஜை கரண்டி நெய் மற்றும் நான்கு கரண்டி ஆயில் சேர்க்கவும்
நெய் சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
அடுத்து தக்காளி பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்றாக வதங்க வேண்டும்
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசனை போகும் அளவுக்கு வதக்கவும்
பின்பு புதினா கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
பின்பு சிக்கன் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்
சிக்கன் சிறிது வதங்கியதும் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்
இரண்டு நிமிடங்கள் வரை பத்திரத்தை மூடி போட்டு வேக வைக்கவும்
முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறுங்கள்
பிறகு 4 கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும்
பிறகு ஊற வைத்த அரிசி தேவையான அளவு உப்பு பாதி லெமன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வரை மூடி வைக்கவும்
10 நிமிடங்கள் கழித்து நெய் ஊற்றி பொறுமையாக கிளறவும்
இப்போது அனைவருக்கும் பிடித்த சுவையான பிரியாணி உண்ண தயார்
இதை தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment